முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசினாரா? - தமிழக பா.ஜ.க. விளக்கம்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      தமிழகம்
Annamalai 2023 03 18

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல் தொடர்பாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, “தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று பேசியதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும் கூட்டத்திலேயே இதுதொடர்பாக கருத்துக்களை முன்வைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பாஜக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து