முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் : எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா அழைப்பு

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      இந்தியா
amit-shah 2022-12-01

Source: provided

புதுடெல்லி : எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் தற்போது பாராளுமன்றத்தில் நிலவிவரும் முடக்கத்திற்கு தீர்வு ஏற்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஊடக நிறுவன நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது, "அரசியலுக்கு அப்பாற்பட்டு சில பிரச்சினைகள் உள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட, அந்நிய மண்ணில் உள்நாட்டு பிரச்சினைகளை விவாதிக்க மறுத்திருக்கிறார்.

இரண்டு தரப்பும் பாராளுமன்ற சபாநாயகர் முன்பு அமர்ந்து விவாதிக்கட்டும். அவர்கள் இரண்டு அடி முன் வந்தால் நாங்களும் இரண்டு அடி முன்னேறிச் செல்வோம். அதன்பிறகு பாராளுமன்றம் இயங்கத் தொடங்கும். ஆனால், நீங்கள் வெறும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. இது அப்படிப்பட்டது இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளால் மட்டுமே பாராளுமன்ற நடைமுறைகள் இயங்க முடியாது. இரண்டு தரப்பும் ஒருவொருவருக்கொருவர் பேச வேண்டும்.

நாங்கள் முயற்சி எடுத்தும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான முன்னெடுப்பும் வரவில்லை. அப்புறம் நாங்கள் யாரிடம் பேசுவது? அவர்கள் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று முழக்கம் இடுகிறார்கள். பாராளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்கவில்லை.

விதிகளின் அடிப்படையில் தான் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஒருவர் சாலையில் பேசுவது போல பாராளுமன்றத்தில் பேச முடியாது. இந்த அடிப்படையான புரிதல் அவர்களிடம் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? இந்த விதிகள் எல்லாம் அவர்களுடைய பாட்டி, தந்தை காலத்தில் இருந்தே இருக்கின்றன. அவர்கள் இந்த விதிகளின்படியே விவாதத்தில் கலந்துகொண்டனர். நாங்களும் விதிகளின் படியே விவாதத்தில் கலந்துகொண்டோம்.

அவர்களுக்கு விதிகளைப் பற்றி எந்த எண்ணங்களும் இல்லை. பின்னர் பேச அனுமதிக்கவில்லை என்று மற்றவர்களைக் குறை கூறுகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர் நினைத்தபோது எழுந்து நின்று பேச முடியாது. அவையில் பேசுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. நீங்கள் அதனை பின்பற்றியாக வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து