முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யகுமாருக்கு பதில் சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்: வாசிம் ஜாபர்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      விளையாட்டு
Vasim-Zafar 2023 03 20

Source: provided

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வேகத்தில் இந்த தொடரில் இரண்டு முறையும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார். இந்நிலையில், வாசிம் ஜாபர் இதனை தெரிவித்துள்ளார். “நாம் இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் விக்கெட் இழந்த விதத்தை பார்த்து அவர் மீது அனுதாபம் கொண்டிருக்கலாம். 

மணிக்கு 145+ கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இடது கை பந்துவீச்சாளரான ஸ்டார்க் போன்ற வீரரை எதிர்கொள்வது சவாலான காரியம்தான். அதில் சந்தேகம் இல்லை. அவர் ஸ்டம்பை அட்டாக் செய்ய பார்ப்பார். அது தெரிந்ததுதான். ஆனால், மீண்டும் சூர்யகுமார் அதனை எதிர்கொண்ட போது அதற்கு தயார் நிலையில் வந்திருக்க வேண்டும். மூன்றாவது போட்டியில் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அது நிச்சயம் தவறான ஆப்ஷனாக அமையாது. அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

________________

சிஎஸ்கே அணியில் ஜேமிசனுக்கு பதிலாக சிசண்டா மகலா தேர்வு

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 31ம் தேதி நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான கைல் ஜேமிசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1 கோடிக்கு எடுத்தது. இவரது வருகையின் காரணமாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு பலமாக காணப்பட்டது.

ஆனால் சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஜேமிசன் விலகினார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரரை அறிவிக்காமல் சென்னை அணி நிர்வாகம் இருந்தது. இந்நிலையில் காயம் காரணமாக விலகி உள்ள ஜேமிசனுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சிசண்டா மகலா சேர்க்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து