முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை: அண்ணாமலை பேட்டி

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      அரசியல்
Annamalai 2023 03 18

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அன்னாமலை கூறினார். 

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் நடிகர் வடிவேல் நடித்த 23-ம் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது. முதல்வர் தினமும் சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகின்றனர் என கேட்டு அதிகாலையில் கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது. 

பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.  அரவக்குறிச்சி தொகுதியில் செலவு செய்தது குறித்து அரசு உளவுத்துறை, 70 ஆயிரம் போலீசார் கர்நாடகவிற்கு அனுப்பட்டும். 

வருவாய் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்த போது ஒரு பைசா லஞ்சம் வாங்கினானா என்பதை தேடி பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன். 

கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். பா.ஜ.க. வளர்ச்சியை ரசிக்க விரும்பவில்லை என்பதை பார்க்கிறேன். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் அல்ல. இதை எப்போ புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் பா.ஜ.க. வளர்ச்சி. அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து