முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      சினிமா
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் (85) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம்  உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழக முதல்வர், அஜித்குமாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது தந்தை மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து