முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4: தேர்வு முடிவு வெளியீடு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      தமிழகம்
TNPSC 2022 12 20

குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாயின.

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவை வெளியிடக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்து இருந்தது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து