முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Anbumani 2022 12 18

Source: provided

கடலூர் : என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே எங்களுடைய கோரிக்கை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

கடலூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழக அரசு இனி என்.எல்.சி.க்காக நிலம் கையகப்படுத்தக் கூடாது. தொடர்ந்து என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகள் கடந்த 66 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒரு காலத்தில் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர், என்.எல்.சி.யால் தற்போது ஆயிரம் அடிக்குச் சென்று விட்டது. 66 ஆண்டு காலமாக இந்த பழுப்பு நிலக்கரியை எரித்து, மின்சாரம் தயாரித்து கொண்டிருக்கிற என்.எல்.சி. வெளிவிடும் நச்சுவாயுக்களால் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் சுவாச பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, ரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்.எல்.சி. நிறுவனத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு தற்போது வரை வேலை வழங்கப்படவில்லை. இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. 

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலே எங்களுடைய கோரிக்கை என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. என்.எல்.சி.யால் தமிழ்நாட்டிற்கு 800 முதல் 1000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கின்றது. 

தமிழ்நாட்டுக்கு ஒருநாளுக்கு தேவைப்படும் மின்சாரம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட். அதில் மிகக்குறைந்த அளவில் தான் என்.எல்.சி. நிறுவனம் கொடுக்கிறது. நாம் வேறு வகையிலே இந்த மின்சாரத்தை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து