முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் தினசரி பாதிப்பு உயர்வு: கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      இந்தியா
India Corona 2022 12-06

Source: provided

புதுடெல்லி : நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு கடந்த 3 தினங்களுக்கு முன் 1,300 ஆகவும், நேற்று முன்தினம் 1,249 ஆகவும் இருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 30-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 1,604-ஆக இருந்தது. அதன்பின்னர் 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பு நேற்றஉ பதிவாகியுள்ளது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில்,  கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மருத்துவ ஆக்சிஜன், உபகரணங்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இன்ஃபுளூயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் வெள்ளிக்கிழமைஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 832 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிழந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 824 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து