முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Isro 2023 03 25

Source: provided

சென்னை : 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது.

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் இன்று (26-ந் தேதி) விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்வெளிக்கு புறப்படுகிறது. ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.

தற்போது ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும். எல்.வி.எம்.3 ராக்கெட்டுகள் 8 டன் எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட ஒன் வெப், இங்கிலாந்து அரசு மற்றும் இந்தியாவின் பாரதிய நிறுவனத்தின் ஆதரவுடன் அதிவேக தாமதமில்லா உலகளாவிய தொலை தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து