முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் என்னால் முடிவுக்கு கொண்டு வர முடியும்: டிரம்ப் உறுதி

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      உலகம்
Trump 2023 03 30

ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வர என்னால் முடியும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, 

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டால், அதோடு அந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவுடன் ஒரே நாளில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

இதற்காக ரஷ்ய அதிபர் புடினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனும் என்னால் எளிதாகப் பேச முடியும். அதே நேரத்தில், இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கான எனது வியூகம் குறித்து இப்போது கூற முடியாது. நான் மேற்கொள்ளும் உத்தி எளிதானதாகவும், பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண்பதாகவும் இருக்கும். 

கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலின் போது நான் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வாகி இருந்திருந்தால் இந்த போரே ஏற்பட்டிருக்காது. ஏனெனில், அந்த அளவுக்கு எனக்கும் புடினுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடக்கும் என தோன்றவில்லை. 

அதே நேரத்தில், இந்த காலம் மிகவும் நீண்டது. இதற்கிடையில் போர் மிகவும் மோசமடைவதற்கான வாய்ப்பும் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் போர் முடிவடையாவிட்டால் அது மூன்றாம் உலகப் போராகக் கூட மாறலாம். அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 

முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போரைவிட மிக மோசமானதாக இந்த மூன்றாம் உலகப் போர் இருக்கலாம். அதோடு இது அணு ஆயுத போராகவும் மாறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து