முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா உணவகத்தில் தரமற்ற உணவா? சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதில்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      தமிழகம்
CM-1 2023 03 30

அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்த  எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். 

ஏழை, எளிய, மக்கள் மலிவு விலையில் வயிறார சாப்பிட்டு திருப்தியடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர்  ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமே, அம்மா உணவகங்கள். ஏழை மக்களின் பசி பிணியை போக்கிய இந்த திட்டம், சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது

இந்த நிலையில், அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்குவதில்லை, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், 

அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை. அம்மா உணவகத்தை எந்த இடத்திலும் மூடவில்லை. அம்மா உணவகத்தை மூட முதல்வரும் சொல்லவில்லை என தெரிவித்தார். 

அம்மா உணவகங்களை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. அம்மா உணவகத்திற்கு கடந்த ஆட்சியை விட அதிகமாக நிதி ஒதுக்கி வருகிறோம். இந்த ஆண்டு ரூ.129 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம் என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார் 

 தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், எந்த அம்மா உணவகத்தில் உணவு தரம் இல்லை என குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்காவது தவறுகள் நடக்கலாம், எந்த இடத்தில் என்பதை தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து