எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இதை தவிர ஒரு சில சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இருந்த போதிலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி மோதல் நிலவுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா 104 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 68 முதல் 80 இடங்களும் , மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரசுக்கு 40.1 சதவீத ஓட்டுகளும், பா.ஜ.க.வுக்கு 34.7 சதவீத ஓட்டுகளும், மத சார்பற்ற ஜனதாதளத்திற்கு 17.9 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில தொகுதிகளில் பாரதிய ஜனதா- காங்கிரஸ் இடையே கடுமையான பலப்பரீட்சை இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அடுத்த முதல் மந்திரியாக யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 39.1 சதவீதம் பேர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், குமாரசாமிக்கு 21.4 சதவீதம் பேரும், காங்கிரசை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு 3.2 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பாரதிய ஜனதா ஆட்சி மோசம் என கருத்து தெரிவித்து உள்ளனர்
கர்நாடகாவில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் அங்கு "கை" ஓங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் லஞ்ச புகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விபாட்சப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மேலும் சமீபத்தில் கர்நாடக பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் கடுமையான போராட்டங்கள் நடந்தது. போலீஸ் தேர்வில் நடந்த ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் சிக்கினார்கள். இதனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.
இருந்த போதிலும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா மும்முரமாக உள்ளது. பிரதமர் மோடி பல தடவை கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளதால் எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு என பாரதிய ஜனதாவினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 12 hours 38 sec ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 4 days 11 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 31-05-2023.
31 May 2023 -
வியன்னா மருத்துவமனையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் 3 நோயாளிகள் பலி
31 May 2023வியன்னா : வியன்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள்.
-
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல் : பாலஸ்தீனிய ஆயுத குழுவினர் 5 பேர் பலி
31 May 2023டமாஸ்கஸ் : லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 5 பேர் உயிரிழந்தனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்தது
31 May 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
-
கருணாநிதி நூற்றாண்டு விழா நாளை தொடக்கம் : இலட்சினை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்
31 May 2023சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நாளை 2-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
இலங்கைக்கு அளித்த ரூ. 8,200 கோடி கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: இந்தியா
31 May 2023கொழும்பு : இலங்கைக்கு இந்தியா அளித்த ரூ. 8,200 கோடி கடன் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
31 May 2023சென்னை : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் உள்ள கடைகளில் லைசென்ஸ் பெற்றால் தான் பீடி, சிகரெட் விற்க அனுமதி : புதிய நடைமுறை விரைவில் அமலாகிறது
31 May 2023சென்னை : தமிழகத்தில் லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்பதற்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.
-
வைகாசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி
31 May 2023விருதுநகர் : வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
சிறுவர்களுக்கு இலவச இ-சிகரெட் வழங்க தடை : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை
31 May 2023லண்டன் : பள்ளி மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
-
இனி ஓ.டி.டி. படைப்புகளிலும் புகையிலை குறித்த எச்சரிக்கை : மத்திய சுகாதாரத்துறை உத்தரவு
31 May 2023புதுடெல்லி : திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதைப் போன்று இனி ஓ.டி.டி.
-
மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது: பள்ளி சீருடையில் உள்ள மாணவர்களை பஸ்ஸில் இருந்து இறக்கி விடக்கூடாது : நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு
31 May 2023சென்னை : மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது என்றும், அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் ம
-
பிரிஜ் பூஷண் வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது : டெல்லி காவல்துறை விளக்கம்
31 May 2023புதுடெல்லி : இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக
-
ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி டி.என்.பி.எஸ்.சி. மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
31 May 2023சென்னை : தமிழக அரசின் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை இனி ஆண்டுதோறும் நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப முத
-
டோக்கியோ – சென்னை இடையே நேரடி விமான சேவை அறிமுகப்படுத்த வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
31 May 2023சென்னை : டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர் - மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் முதல்வர் மு
-
முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் கெஜ்ரிவால்
31 May 2023சென்னை : மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் தமிழக முதல்வர் மு.க.
-
மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்: கர்நாடக மாநில துணை முதல்வர் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதில்
31 May 2023சென்னை : மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
-
3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகார விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
31 May 2023சென்னை : தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரிகள் தனது அங்கீகாரத்தை இழக்கும் நிலை குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தமிழக பல்கலை.களில் மொழி பாடத்தில் ஒரே பாடத்திட்டம் : துணைவேந்தர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
31 May 2023சென்னை : தமிழக பல்கலைக்கழகங்களில் மொழிப்பாடத்தில் ஒரே பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர் கல்வித்
-
சேலம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
31 May 2023சென்னை : சேலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : ஐ.நா. சபை மீண்டும் எச்சரிக்கை
31 May 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் 5-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
31 May 2023சென்னை : மேட்டூர் அணை வரும் 12-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் 5-ம் தேதி முதல்வர் மு.
-
தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள்: ஒவ்வொரு காலாண்டிலும் இனி வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
31 May 2023சென்னை : தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரம் என்றும் இனி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும்&n
-
கோடை மழை பாதிப்பு: உசிலம்பட்டி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
31 May 2023சென்னை : உசிலம்பட்டி பகுதியில் பெய்த கோடை மழையால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்
31 May 2023திருவனந்தபுரம், : இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.