முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரன்

திங்கட்கிழமை, 29 மே 2023      சினிமா
Viran 2023-05-29

Source: provided

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் வீரன். இப்படத்தில் ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் இப்படத்தை வெளியிடுகிறார். இப்படம் இந்த வாரம் வெள்ளியன்று வெளியாவதை ஒட்டி நேற்று செய்தியாளர்கள் சந்நிப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாயகன் ஆதி. இந்த படம் ஒரு அழகான அதே நேரம் அதிரடியான ஒரு வீரனை சுற்றி நடைபெறும் கதை என்றார். குடும்பம் சகிதம் பார்க்கும் வகையில் படத்துக்கு யு சான்றியழ் கிடைத்துள்ளது என்றார். இயக்குனர் பேசுகையில், படத்தில் கிராபிக் காட்சிகள் காமெடி காட்சிகள் அதிகம் உள்ளது என்றார். மரகத நாணயம் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரின் படம் என்பதாலும் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பு என்பதாலும் இப்பட்டத்துக்கு எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து