முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஜ் பூஷண் வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது : டெல்லி காவல்துறை விளக்கம்

புதன்கிழமை, 31 மே 2023      இந்தியா
Brij-Bhushan 2023 04 29

Source: provided

புதுடெல்லி : இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, விசாரணையின் நிலை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், பிரிஜ் பூஷணுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் இது தொடர்பான அறிக்கை இன்னும் 15 நாள்களில் தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், டெல்லி காவல்துறை, டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, போதிய ஆதாரம் இல்லை என்று வெளியான செய்திகள் தவறானவை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளரும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்தில் இந்த தகவல் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதனை வாட்ஸ்ஆப் குழுக்களிலும் மக்கள் தொடர்பு அதிகாரி பதிவிட்டிருந்தார். அதுவும் நீக்கப்பட்டுவிட்டது.

பிறகு, காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹிந்தியில் மற்றொரு தகவலை பகிர்ந்தார், அதில், மல்யுத்த வீராங்கனைகள் பதிவு செய்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிலை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார். அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, வழக்கு விசாரணை குறித்து எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவா் பிரிஜ் பூஷண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரை கைது செய்ய வலியுறுத்தி, மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பின்னரே இரண்டு வழக்குகள் பிரிஜ் பூஷண் சிங் மீது பதிவு செய்யப்பட்டன. ஏற்கெனவே அவா் மீது 40-க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரிஜ் பூஷண் சிங் மீது சிறுமி ஒருவா் பாலியல் தொல்லை வழக்கு கொடுத்த பின்னரும், போலீசார் அவரை கைது செய்யவில்லை. ஆளுங்கட்சி எம்.பி.யாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து