முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயோமெட்ரிக் முறையில் இனி நெல் கொள்முதல்: தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Bio Metric

சென்னை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே இனி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. 

 தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. 

பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்றும் நெல்லை கொடுக்கும் விவசாயிகளிடம் மூட்டைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து