முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி' - கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
CM-3 2023-06-03

Source: provided

சென்னை : நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான - மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது.
அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் - பண்டித அயோத்திதாசர் - தாத்தா இரட்டைமலை சீனிவாசன் - பிட்டி தியாகராயர் - நடேசனார் - டி.எம்.நாயர் - ஏ.பி.பாத்ரோ - எம்.சி.இராஜா - பனகல் அரசர் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா எனத் தமிழினத்தின் இனமான - பகுத்தறிவு - சுயமரியாதை உணர்வைக் காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து - தலைமை தாங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி!
எண்ணற்ற சமூக நலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்! தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 16 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 16 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து