முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்களம் போன்று காட்சியளித்த பாலசோர் மாவட்ட மருத்துவமனை

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
MODI-1 2023-06-03

Source: provided

பாலசோர் : ரயில் விபத்தில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோரை அருகில் உள்ள பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்து பாலசோர் மாவட்டத்திற்கு உட்பட்ட பஹனாகா பகுதியில் நடைபெற்றது. இதனால் காயம் அடைந்த 1000-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகிகள் படுக்கை எண்ணிக்கைகளை அதிரிகத்தனர். இருந்தாலும் ஒரே நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட, கை கால்கள் இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் மருத்துவமனை போர்க்கள பகுதி போன்று காட்சியளித்தது. மேலும், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயணம் செய்ததால் மொழி தெரியாத காரணத்தினால் மருத்துவ உதவி செய்வதில் கம்யூனிகேசன் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த அனுபவம் குறித்து மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட மருத்துவ அதிகாரி மிருதுன்ஜாய் மிஷ்ரா கூறியதாவது ''நான் பல ஆண்டுகளாக வேலை பார்த்திருக்கிறேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற பரபரப்பான, அலறல் சத்தத்துடன் கூடிய நிகழ்வை பார்த்தது கிடையாது.
திடீரென 251 பேர் காயத்துடன் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். போதுமான படுக்கைகள் இல்லை. மருத்துவ ஊழியரகள் இரவு பகலாக முதலுதவி அளித்தனர். ஐந்தாறு பயணிகளை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தோம். தற்போது 60 பயணிகள் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிறு காயம் அடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உதவி செய்த அனைவருக்கும் நன்றி. இது வாழ்நாள் அனுபவமாக இருக்கும். தற்போது எல்லாம் சகஜ நிலைக்கு வந்துள்ளது. பாலசோர் மருத்துவமனைக்கு முன்பு சுமார் 2000 பேர் கூடினர். அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்ததுடன், ரத்த தானமும் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 16 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 16 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து