எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம் என்றும், ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில், 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் கட்டுவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக நம்முடைய தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில்துறையானது மிக வேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது. தமிழக அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன.
தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினை கொண்டதாக இருக்கின்றது. அனைவரையும் உள்ளடக்கிய நமது திராவிட மாடல் வளர்ச்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்களும், பெண்களும் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத்தும் ஏழை, எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன்.
தற்போதுள்ள சூழ்நிலையில், ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறி விட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.
முற்றிலுமாக எல்லா இடங்களுக்கும் எல்லாத் தரப்பினரயும் இது இன்னும் சென்றடையவில்லை என்று சொன்னாலும், எதிர்காலத்தைக் கருதி, அதற்கு ஏற்ப நமது திட்டமிடுதல்கள் இருக்கவேண்டும். தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நம்புகிறேன்.
படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக் கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும். நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேறுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021 என்ற சிறப்புக் கொள்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். 50 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு மேற்கொள்ளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் தனியே ஒரு நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் சென்னையில் ஒரு நிதிநுட்ப நகரம் அமைத்திடுவதற்கும், நிதிநுட்ப சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், ஒரு நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஜனவரி மாதம் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்று, சிறப்பிக்குமாறும் உங்கள் துறை சார்ந்த தொழில்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் அன்போடு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
அடிலெய்டு தோல்வி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 3-வது இடத்திற்கு சரிந்தது : ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேற்றம்
08 Dec 2024அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட்டில் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு இந்திய அணி சரிந்தது.
-
வி.சி.க.வின் நலனுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடு உள்ளது : மதுரையில் திருமாவளவன் பேட்டி
08 Dec 2024மதுரை : ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக் கால செயல்பாடு வி.சி.க.வின் நலனுக்கு எதிராகவே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
-
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
08 Dec 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
-
இந்தியாவிலேயே குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தமிழகம்தான் : அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
08 Dec 2024கரூர் : இந்தியாவிலேயே ஒரு யூனிட் மின்சாரம் குறைந்த விலையில் வழங்குவது தமிழகம்தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
-
வலை தளத்தில் அல்ல: களத்தில் வேலை செய்பவர்கள் நாங்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்
08 Dec 2024திருச்சி : திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
-
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர் : அதிபர் தப்பிச் சென்ற விமானம் மாயம்?
08 Dec 2024டமாஸ்கஸ் : சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பின் திறப்பு : அதிபர் மேக்ரான், டிரம்ப், ஜெலன்ஸ்கி பங்கேற்பு
08 Dec 2024பாரிஸ் : பாரிசில் நாட்டார்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர்கள் டிரம்ப், மேக்ரான், ஜெலன்ஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
மகராஷ்டிராவில் சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் : பா.ஜ.க.வின் நர்வேகர் வேட்புமனு தாக்கல்
08 Dec 2024மும்பை : மகராஷ்டிராவின் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்க இருக்கிறது. சபாநாயகர் பதவிக்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.
-
அதிக கோடீஸ்வரர்களை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்
08 Dec 2024புதுடெல்லி : அதிக கோடீஸ்வரர்களை கொண்ட தரவரிசை பட்டியலில் முதல் 10 நாடுகளில் இந்தியா 3-வது இடம்பிடித்துள்ளது.
-
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
08 Dec 2024சென்னை : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைய உள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
08 Dec 2024திருச்சி : ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
மாணவி கூட்டு பலாத்காரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Dec 2024சென்னை : மனநலம் பாதித்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை : துணை பட்ஜெட் தாக்கல் ஆகிறது
08 Dec 2024சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
-
தி.மலை.யில் மகாதீபம் ஏற்றப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது : புவியியல் வல்லுநர்கள் தகவல்
08 Dec 2024தி.மலை : திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அண்ணாமலையார் பாதம் உள்ள கொப்பரை வைக்கப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்
-
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்
08 Dec 2024ஐதராபாத் : சொத்து தகராறு காரணமாக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&n
-
டிச.21-ல் சர்வதேச தியான தினம்: இந்தியா கோரிக்கை ஐ.நா. ஏற்பு
08 Dec 2024நியூயார்க் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, வரும் 21-ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.&n
-
கடலூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த அன்புமணி
08 Dec 2024கடலூர் : கடலூர் கண்டகாடு பகுதியில் பா.ம.க. சார்பில் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ் அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்.
-
ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி
08 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் கா
-
குறைந்த கட்டணத்தில் அனைத்து கிராமங்களிலும் அதிவேக இணைய சேவை வழங்க தமிழக அரசு திட்டம்
08 Dec 2024சென்னை : அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
08 Dec 2024மும்பை : மராட்டிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் நகை, செல்போன் என ரூ.
-
இந்தியாவிற்குள் நுழைய முயன்ற வங்கதேச நபர் கைது
08 Dec 2024கவுகாத்தி : இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேச நபர் கைது செய்யப்பட்டார்.
-
அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ்: டெல்லியில் பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்த மத்திய அமைச்சர்கள்
08 Dec 2024புதுடெல்லி : டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர்கள் 2 பேர் அலங்கார ஆடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.
-
சென்னை பல்லாவரத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அனுமதி மறுப்பு : போலீசாருடன் த.வெ.க.வினர் வாக்குவாதம்
08 Dec 2024சென்னை : சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க த.வெ.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
நெதர்லாந்தில் வெடித்து சிதறிய குடியிருப்பு கட்டிடம்: 5 பேர் பலி : பிரதமர் டிக் ஸ்கூப் இரங்கல்
08 Dec 2024தி ஹேக் : நெதர்லாந்தில் திடீரென குடியிருப்பு கட்டிடம் வெடித்து சிதறிய விபத்தில் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
-
முகமது ஷமியை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம் : அணிக்கு திரும்புவது குறித்து ரோகித் சர்மா விளக்கம்
08 Dec 2024அடிலெய்டு : முகமது ஷமி இந்திய அணிக்கு எப்பொழுது திரும்புவார் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.