முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

புதன்கிழமை, 6 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Krishna-Jayanti 2023-09-05

Source: provided

சென்னை : நாடு முழுவதும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அரிசி மாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடும் நடத்தப்படும். 

அந்த வகையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அமைந்துள்ள பகவான் கோகுல கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ணர் சிலைக்கு உத்தரபிரதேசம், ஐதராபாத் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட முத்து, பவளம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த ஆடை அணிவிக்கப்பட்டு, மங்கள, தூப், ராஜ் பக், துளசி, சந்திய போன்ற பலவகையான ஆரத்திகள் ஏற்றப்பட்டன. பின்னர் கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன

சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோவில் வளாக பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணர் பிறந்திருப்பது போன்றவை காட்சிப்படுத்தப்பட்டது. 

இதே போல்,  சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ணர் பிறந்ததை நினைவு கூறும் வகையில் காட்சியமைத்து பக்தர்கள் பூஜை  செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை  பெரிய கடை வீதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோவிலில்  பால் அபிஷேகம் ,வெண்ணைய் அபிசேகம் ,பன்னீர் அபிஷேகப் பொருட்களால்  அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த சந்தான கோபால கிருஷ்ணன் சுவாமியை திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். 

சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரியில் யாதவ மகா சபை பேரவை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த மாரத்தான் போட்டியில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 weeks 20 hours ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 20 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 3 weeks ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 3 weeks ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 3 weeks ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து