முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபரானால் எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன்: விவேக் ராமசாமி பேட்டி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      உலகம்
Vivek-Ramasamy 2023-08-27

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் என இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான பலமுனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெரும் தொழிலதிபர் விவேக் ராமசாமியும் உள்ளார். 

அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு குடியரசு கட்சியினரின் ஆதரவை பெற தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் விவேக் ராமசாமி பல்வேறு கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய திட்டங்களை அறிவித்து வருகிறார். இதன் மூலம் அவர் வேட்பாளர் போட்டிக்கான களத்தில் தனித்து தெரிவதோடு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த விவேக் ராமசாமி தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதோடு, பல அரசு நிறுவனங்களையும் மூடுவேன் என கூறினார். 

இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபரானால் இந்தியர்கள் பெரிதும் பலன்பெறக்கூடிய எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் எச்-1 பி விசா திட்டத்தை ஒப்பந்த அடிமைத்தனத்தின் வடிவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்-1 பி விசா அமைப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோசமானது. குலுக்கல் முறையில் எச்-1 பி விசா வழங்கும் திட்டத்தை அகற்றி விட்டு, உண்மையான தகுதி சேர்க்கை மூலம் விசா வழங்கப்பட வேண்டும். 

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நிச்சயம் அதை செய்வேன். எச்-1 பி விசாவானது, அந்த விசா மூலம் அமெரிக்காவில் குடியேறியவருக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனத்தின் நன்மைக்காக மட்டுமே பெறப்படும் ஒப்பந்த அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாகும். 

குடும்ப உறுப்பினர்களாக வருபவர்கள் இந்த நாட்டிற்கு திறன் சார்ந்த பங்களிப்புகளை செய்யும் தகுதி வாய்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. எல்லையை பாதுகாக்க ராணுவ பலத்தை பயன்படுத்துவதோடு, சட்டவிரோத குடியேறிகளுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளை நாடு கடத்துவேன் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து