முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Buildings 2023-09-18

Source: provided

நெல்லை : நெல்லையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 102 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. 

நெல்லை மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறாமல் மாநகரப் பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து உதவிப் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கு எடுத்தனர். இதையடுத்து கடந்த 10 நாட்களாக 481 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 26 வணிக வளாகங்கள் மற்றும் 76 வீடுகள் முறையான அனுமதி இன்றி விதி முறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்தது.

இது குறித்த ஆய்வு அறிக்கையை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பொறியாளர்கள் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக அனுமதியின்றி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களை ஏன் இடித்து அப்புறப்படுத்தக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நகர ஊரமைப்பு சட்டப்பிரிவு 456-ன் படி 102 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. 

அதற்கு உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளித்து விதிமீறல்களை சரி செய்து, அபராத தொகையுடன் கூடிய கட்டணம் செலுத்தி கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு அனுமதி பெற விண்ணப்பிக்காத கட்டிடங்களை கண்டறிந்து எடுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக கமிஷனர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து