முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 பொதுத்தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஜனதா தளம் : அமித்ஷா, நட்டாவை சந்தித்த குமாரசாமி

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      இந்தியா
Kumaraswamy 2023 08 18

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலை ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர்  எச்.டி. குமாரசாமி மத்திய உள்துறை அணைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து தேர்தல் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார். குமாரசாமி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. அவர்களை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். இது தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிரதமர் மோடியின் புதிய இந்தியா, உறுதியான இந்தியா என்ற நோக்கத்தை வலுப்படுத்தும் என்று ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து