முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர தடுப்பணைகள் நிரம்பியது: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      இந்தியா
Palar 2023-09-25

வேலூர், கனமழையால் ஆந்திராவில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் வெளியேற்றப்படும் உபரி நீரால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திரா எல்லை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி தமிழக பாலாற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதனால் திம்மம்பேட்டை, ஆவாரமங்குப்பம், ராம்நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும் ஆந்திரா எல்லை பகுதியான மாதகடப்பா, வீரனமலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகி திம்மாம்பேட்டை மன்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆவரங்குப்பம் வழியாக மழை நீர் பாலாற்றில் கலந்து வழிந்தோடுகிறது. 

இதன் காரணமாக பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வேலூர் மாவட்டம் செதுவாலை ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. 

பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதே போல் பாலாற்றின் கிளை ஆறுகளான குடியாத்தம் கவுன்டண்யா ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒடுகத்தூர் அருகே உள்ள உத்தர காவேரி ஆறு, கணியம்பாடி அருகே உள்ள நாகநதி ஆற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து