முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு  அடிக்கல் நாட்டினார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்வரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று (15.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, வி.க.நகர் மண்டலம், வார்டு-78, நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, மேயர் ஆர்.பிரியா மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுமதி, புனிதவதி எத்திராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து