முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோ - பசிபிக் ராணுவ தளபதிகளுக்கான மாநாடு : ராஜ்நாத்சிங் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      இந்தியா
Rajnath-Singh-2023-04-2

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நேற்று நடந்த  13-வது இந்தோ - பசிபிக் ராணுவ தளபதிகளுக்கான மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். 

டெல்லியில் 13-வது இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகளுக்கான மாநாடு நேற்று நடந்தது. இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது, 

அனைத்து உறுப்பு நாடுகளின் ஜி-20 தலைவர்களுக்கான தீர்மானம் ஒரு பெரிய வெற்றியாக அமைந்து உள்ளது. பிரதமர் மோடி இந்தோ-பசிபிக் பகுதிக்கு ஒரு மந்திரம் தந்திருக்கிறார். அது பரஸ்பர மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி மற்றும் வளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. 

இந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவமானது கடல்வழி வர்த்தகம் அல்லது தொலைதொடர்பு வழிகள் என்ற அளவில் நின்று விடவில்லை. ஒரு விரிவான, அரசியல் சார்ந்த, பாதுகாப்பு மற்றும் தூதரக பரிமாணங்களையும் அது கொண்டுள்ளது என்று கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து