எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
தருமபுரி வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் நேற்று (செப்.29) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், அவற்றை தள்ளுபடி செய்ததோடு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ அளித்த பேட்டியில்,
கடந்த 1992-ல் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார். தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் ரூ. 5 லட்சம் அரசாங்கமும், ரூ. 5.லட்சம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும் உத்தரவிட்டுள்ளார். அப்போதைய தருமபுரி கலெக்டர், எஸ்.பி., வன அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார். இவை மட்டுமல்லாது அப்பகுதியில் தேவைப்படும் மக்கள் நலப் பணிகளை செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார் என்று கூறினார்.
வழக்கு பின்னணி:
தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1992-ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
வாச்சாத்தி கிராமப் பகுதிகளில் கடந்த 1992-ம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி சந்தன மரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக கூறி 155 வனத்துறையினர், 108 போலீசார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர் சோதனையிட்டனர். வீடு,வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடவடிக்கையின்போது கிராம மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 18 மலைவாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அரூர்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அப்போதைய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் உரிய விசாரணை ஏதும் நடைபெறவில்லை எனக்கோரி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 1995-ம்ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சி.பி.ஐ.-க்கு வழக்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட வனத்துறையைச் சேர்ந்த 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்துறையினர் 6 பேர் என மொத்தமாக 269 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 1996-ல் சி.பி.ஐ. கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவை மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப்பட்டு, 2008-ல் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு:
வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டிலேயே ஒரு வழக்கில் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இது இருந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்வை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். தொடர்ந்து இவ்வழக்கு சம்பந்தமான இடங்கள் மற்றும் மக்களிடையே நேரில் விசாரணை செய்யவும் முடிவு செய்து அதன்படி கடந்த மார்ச் 4-ம் தேதி வாச்சாத்தி கிராமத்துக்கு நீதிபதி பி.வேல்முருகன் வருகை தந்தார்.
சம்பவத்தில் தொடர்புடையப் பகுதிகளாக கருதப்படும் பழங்குடிகள் தொடக்கப்பள்ளி, ஏரிப்பகுதி, ஆலமரம், தண்ணீர் தொட்டி, மலைப்பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் மேல் முறையீட்டு வழக்கின் மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
ரூ.32.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது: ஐகோர்ட் மதுரை கிளையில் வாதம்
15 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் என்றும், தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில்
-
தே.மு.தி.க. மாநாடு 2.0: பிரேமலதா அழைப்பு
15 Dec 2025சென்னை, தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
15 Dec 2025சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு
15 Dec 2025சென்னை, மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு 1 கோடி ரூபாயும், க
-
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டம்
15 Dec 2025புதுடெல்லி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்: ஜே.பி.நட்டா அறிவிப்பு
15 Dec 2025புதுடெல்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
ஈரோட்டில் நடைபெறவிருக்கும் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் பெண்களுக்கென தனி இடம்
15 Dec 2025சென்னை, ஈரோட்டில் த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


