முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிப்காட்டுக்காக விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு: தி.மலையில் வரும் 4-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : அனக்காவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 3,300 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 4-ம் தேதி நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம் என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான செயலில் தி.மு.க. அரசு இறங்கி உள்ளது. இச்செயல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. 

இந்த செயலில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வரும் 4-ம் தேதி மை காலை 10.30 மணியளவில், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம், மேல்மா கூட்டு ரோடு என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் இராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலும்,  திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்  பாபுமுருகவேல், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து