முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர் எடுத்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023      விளையாட்டு
01

Source: provided

அகமதாபாத்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் ஆரம்பத்திலேயே 4 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் மறுபுறம் இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அசத்திய கேப்டன் ரோகித் சர்மா வேகமாக ரன்களை சேர்த்தார். 

குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 47 (31 பந்துகள்) ரன்களை விளாசி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார்.  

இந்த 3 சிக்சர்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 86 சிக்சர்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த பட்டியல்: 

1. ரோகித் சர்மா : 86* (ஆஸ்திரேலியா) 

2. கிறிஸ் கெயில் : 85 (இங்கிலாந்து) 

3. ஷாஹித் அப்ரிடி : 63 (இலங்கை) 

4. சனாத் ஜெயசூர்யா : 53 (பாகிஸ்தான்)

5. ஷாஹித் அப்ரிடி  : 51 (இந்தியா)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து