முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட்: கடந்த 17 நாட்களாக சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா
Uttarakhand 2023-11-28

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய  41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் 17 நாட்களாக நடந்து வந்து போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர்.

17 நாட்களாக... 

சுமார் 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்குப் பணியில் வெற்றி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் 41 தொழிலாளர்கள் வெளியே பத்திரமாக திரும்ப வேண்டும் என்று செய்த பிரார்த்தனை நிறைவேறியிருக்கிறது. உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளா்களை விரைந்து மீட்கும் வகையில், மலைப் பகுதியில் செங்குத்தாக துளையிடும் பணியோடு, சுரங்க இடிபாடுகள் பகுதியில் கிடைமட்டமாக துளையிடும் பணியை தொடரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

துளையிடும் பணி....

அதுமட்டுமின்றி, சுரங்கத்தின் மறுமுனையான பா்கோட் வழியாகவும் கிடைமட்டமாக 3-வது துளையிடும் பணியும் தொடங்கியது. மலைப் பகுதியில் செங்குத்தாக 86 மீட்டா் ஆழத்துக்கு துளையிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், நேற்று (செவ்வாயக்கிழமை) 3.30 மணிக்கு குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு பெற்றது. உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.

மீட்கும் பணிகள்...

தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதுடன், இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் மற்றும் கைப்பேசி, அதற்கான மின்னேற்றிகளும் அனுப்பப்பட்டன. இதனிடையே, இடிபாடுகளிடையே 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயை 60 மீட்டா் தொலைவுக்குச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் நடந்தன.

மீண்டும் தொடங்கியது...

குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடை கொண்ட ஆகா் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் நிலவியது. இதனிடையே, மலையின் மேல் பகுதியிலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு, துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. அதன்படி எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாட்கள்) 41 தொழிலாளா்களையும்ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்கப்பட்டனர். 

410 மணி நேரத்திற்கு...

 

மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் விகே சிங் நலம் விசாரித்தனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சுரங்க வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு முதலில் அழைத்து செல்லப்பட்டு அவர்களின் நிலை குறித்து மருத்துவர்கள் சோதனை செய்தனர். சுமார் 410 மணி நேரத்திற்கு பிறகு சுரங்க தொழிலாளர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். 17 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன் பல்வேறு மீட்புக்குழுவினரும் சாதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து