முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ஐ.பி.எல். தொடர்: சென்னை அணியில் பும்ரா..?

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

மும்பை : மும்பை இண்டியன்ஸில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதன் மூலம் அவர் மும்பை அணியில் இருந்து சென்னை அணிக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 19-ல் ஏலம்...

இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிச. 19-ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே அணிகள் வீரா்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவ. 26-ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.

பதிவால் சந்தேகம்...

இதில், மும்பை இண்டியன்ஸில் அணி பும்ராவை தக்கவைத்துக் கொண்டதாக தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ஐபிஎல் அணிகளிடம் இருந்து டிரேடிங் முறையில் நேரடியாக வீரர்களை வாங்கிக் கொள்ளும் முறை டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவை அந்த அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் மும்பை இண்டியன்ஸில் அணி நேற்று முன்தினம் வாங்கியது. இந்த நிலையில், பும்ரா நேற்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாக....

இந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிரும் பும்ராவின் ரசிகர்கள், மும்பை அணியிலிருந்து வேறு அணிக்கு அவர் டிரேடிங் செய்யப்படவுள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், மும்பை இண்டியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களை பும்ரா பின்தொடர்வதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த செய்தி குறித்து பும்ரா மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணியின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றிக்கு பலமுறை முக்கிய காரணமாக அமைந்துள்ள பும்ரா, அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.கே அணியில்...

இந்த குழப்பம் முடிவுக்கு வருவதற்குள் மேலும் ஒரு குழப்பத்தை பும்ரா ஏற்படுத்தி உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை unfollow செய்துள்ளார். இதற்காக தான் அவர் அப்படி ஒரு ஸ்டோரியை வைத்துள்ளாரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது. மேலும் அவர் சி.எஸ்.கே. அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சி.எஸ்.கே. ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியும், கேமரூன் கிரினை பெங்களூர் அணியும் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து