முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடி உதிர்தல் பிரச்சினையால் சோகத்தில் வடகொரிய மக்கள்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      உலகம்
North-Korean-2023-11-29

பியாங்கியாங், முடி உதிர்தல் பிரச்சினை வட கொரியாவில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் சோகமடைந்துள்ளனர். 

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், தனது வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர். இப்போது அவருக்கு பதிலாக வடகொரியா மக்கள் விவாதத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது ஒரு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். அதுதான் முடி உதிர்தல் ஆகும். 

வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகி விடும் என்ற அபாயம் உள்ளது. நியூயார்க் போஸ்ட் அறிக்கையின் படி, முடி உதிர்தல் தொற்றுநோய் வட கொரியாவில் வேகமாக பரவுகிறது என்று  தென் கொரிய நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதற்கு காரணம் வட கொரியாவில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் சலவை சோப்புகள்தான் என்று நிபுணர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விரைவான முடி உதிர்வு ஏற்படுவதாக  கூறப்படுகிறது.

மேலும் வடகொரியாவில் ராணுவம் தொடர்பாக கடுமையான விதிமுறை உள்ளது. அனைத்து உடல் திறன் கொண்ட ஆண்களும் பொதுவாக ஆயுதப் படையில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக உள்ளது. வடகொரியாவை தொடர்ந்து தற்போது தென்கொரியாவிலும் திடீரென முடி உதிர்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து