முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வரும் 3-ம் தேதி பார்வேத மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம். 8-ம்  தேதி சர்வ ஏகாதசி. 12-ம் தேதி ஆட்சியாய நொச்சவளு ஆரம்பம். 17-ம் தேதி தனுர் மாதம் ஆரம்பம். 22-ம் தேதி ஏழுமலையான் சன்னதியில் சின்ன சாஅத்தும் முறை. 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி ஆரம்பம். 24-ம் தேதி வைகுண்ட துவாதசி அன்று ஏழுமலையான் சக்ர ஸ்நானம். 28-ம் தேதி பிரணயகலஹ உற்சவம் நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து