முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு பரவல்: தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சேலம் : டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. காய்ச்சல் பரவலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.

இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் சாதி உள்ளிட்ட விவரங்களை கேட்பது பிரச்சினையை ஏற்படுத்தும். சாதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெண் பயணிகளிடம் கேட்பது ஏன்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நானும் டெல்டா காரன்தான் என்று முதல்வர்  கூறிக்கொண்டால் போதாது. டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் முழுமையான விளைச்சலை பெறவில்லை. 

கடன் வாங்கிதான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். விவசாயிகளை தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. மக்களுக்கு முறையான பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து