முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      உலகம்
Israeli-army-2023-11-30

Source: provided

டெல் அவிவ் : காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. 

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல் 240 பேரை பிணைக் கைதிகளைாக பிடித்துச் சென்றனர். 

இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 46 நாட்கள் இடைவிடாத தாக்குதலில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் போர் நிறத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டன. 

இதன் பயனாக கடந்த 24-ம் தேதி வெள்ளிக்கிழமை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஒரு பிணைக் கைதியை விடுவிக்க 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. 

முதல் நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் இரண்டு நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. 

7-வது நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. ஹமாஸ் அமைப்பினர் அனைத்து பாலஸ்தீனர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்கிறோம் எனத் தெரிவித்தது. 

ஆனால், இஸ்ரேல் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் எனத் தெரிவித்தது. இதனால் இழுபறியான நிலையில் கடைசி நிமிடத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் 7-வது நாளான நேற்று முன்தினம் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். 

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.இந்திய நேரப்படி நேற்று காலை 10.30 மணியுடன் ஏழு நாள் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. 

இதற்கிடையே பிணைக்கைதிகள்- பாலஸ்தீனர்கள் விடுதலை பரிமாற்றத்திற்காக இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில் ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறி விட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து