எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, வங்கக் கடலில் வலுப்பெறும் மிக்ஜம் புயல் வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக மாறி, இன்று (சனிக்கிழமை) புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கும் நிலையில், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (3-ம் தேதி) புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 4-ம் தேதி வட தமிழகம் - மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலுக்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட உள்ளது. மியான்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும். இந்த நிலையில் புயல் கரையைக் கடக்கும் இடம் மாறியுள்ளதால், கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; சென்னைக்கு 780 கி.மீ. தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் மையம் கொண்டுள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று, பின் புயலாக உருவாகவுள்ளது.
டிசம்பர் 3-ல் உருவாகும் புயல், 5-ம் தேதி கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 3-ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 4-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும். அப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அடுத்த 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோர பகுதி, மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |