முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : நாளை அதிகாலை கரையை கடக்கும்

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
Puyal

Source: provided

சென்னை : இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மிக்ஜம் புயல் டிச.5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்றும், தற்பொழுது சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயலானது மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது நாளை புயலாக வலுப்பெற்று 5-ம் தேதி கரையைக் கடக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் விரிவான பதிவில்,  வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘மிக்ஜம்’ புயல் டிச. 5-ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூா் -மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஞாயிறு - டிச. 3) கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (டிசம்பர் 4-ம் தேதி) திங்களன்று, வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். ஞாயிறன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.  திங்கள்கிழமை மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

142 ரெயில்கள் ரத்து

'மிக்ஜம்'  புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 7-ம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து