முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜம் புயல் பாதித்த தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலினிடம் அமித்ஷா உறுதி

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
Amit-Shah 3

Source: provided

சென்னை : மிக்ஜம் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உள் துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக நேற்று கேட்டறிந்தார். சென்னை உள்பட 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக மீட்புப் படையினரை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். அப்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். 

மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதலாக தேச்ய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். மழை பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசிடம் உரிய இழப்பீடு கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து