முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிமலை வெடித்து சிதறியதில் மலையேற்ற வீரர்கள் 11பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      உலகம்
Indonesia 2023-12-05

Source: provided

ஜகார்த்தா : இந்தோனேசியாவில் எரிமலை  திடீரென வெடித்து சிதறியதில் 11 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணம் அகம் பகுதியில் மராபி என்ற மலை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு மலையேற்ற வீரர்கள் பலரும் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் 75-க்கும் மேற்பட்ட வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அந்த மலையின் 9,800 அடி உயரத்தில் சக்திவாய்ந்த எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று முன்தினம்

 திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் புஸ்வாணம் போல வானத்தை நோக்கி தீக்குழம்பு வெளியேறியது. இதனையடுத்து இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் டன்கணக்கில் அருகில் உள்ள கிராமங்களை மூடியது. 

இதனால் அந்த கிராமங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே மலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இதில் சுமார் 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

எனினும் இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்த 11 மலையேற்ற வீரர்களின் உடல்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. 8 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். 

அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி மேலும் 22 மலையேற்ற வீரர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து