முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 80 சதவீத இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது : தலைமை செயலாளர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
Shiv-Das-Meena

Source: provided

சென்னை : சென்னையில் 80 சதவீதம் இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மிக்ஜம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மிக்ஜம் புயல் சென்னையை கடந்த பிறகு தற்போது மழையின் தீவிரம் குறைந்தது. நேற்று முதல் சென்னை வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 சதவிகித இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை தொடர்ந்து தடையின்றி இயங்கி வருகிறது. சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 70 சதவிகித தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக கூடுவாஞ்சேரி துணைமின் நிலையம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் மின்சாரம் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துணைமின் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து