முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதிப்பு நிவாரண பணிகளில் உதவ தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் தவித்து வருகின்றனர்.

மழை குறைந்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர். பல்வேறு நபர்களும், தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.  இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 9791149789, 9445461712, 9895440669, 7397766651 ஆகிய எண்கள் மூலம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் தொடர்பு கொள்ள சென்னை பெருநகர காவல் உதவி மையம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி மழைநீரை அகற்றுதல், மரங்களை வெட்டும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து