முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Student 2023-05-25

Source: provided

சென்னை : கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக மாணவர்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததாலும் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், மாணவர்களின் நலன் கருதி இன்றும் (டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஏற்கனவே கனமழை காரணமாக இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன்(நேற்று) ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு., ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, இன்று(7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் , தாம்பரம் , செங்கல்பட்டு , வண்டலூர் , திருப்போரூர் , திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில்  விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து