முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை இலச்சினை

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      விளையாட்டு
T20-2023-12-07

அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி நேற்று வெளியிட்டது.  இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலிய அணி சாம்பியன் ஆனது.

இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகின்ற ஜூன் மாதம் 4 முதல் 30 வரை டி20 ஆண்கள் உலகக் கோப்பை தொடரும், வங்கதேசத்தில் டி20 பெண்கள் உலகக் கோப்பை தொடரும் நடைபெறவுள்ளன. இந்த தொடர்களுக்கான இலச்சினையை ஐசிசி நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும், டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்க உள்ளது. தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றது.இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா சென்ற  இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றனர். டெஸ்ட் அணி வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.

கவுதம் காம்பீர் மீது குற்றச்சாட்டு 

ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கவுதம் காம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீர் ஆரம்பத்திலேயே குஜராத் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு எதிராக பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து அதிரடியாக விளையாடினார். அதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்ட நிலையில் நடுவர்களும் சக வீரர்களும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் அந்த சமயத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால் கவுதம் கம்பீர் தம்மை திட்டியதாக அந்த ஆட்டம் முடிந்தவுடன் தனது வலைதள பக்கத்தில் ஸ்ரீசாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார். 

 

கோலியால் முடியாது: பிரைன் லாரா

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை உடைத்துள்ள அவர் நடைபெற்று முடிந்த 2023 உலகக்கோப்பையில் 765 ரன்கள் விளாசி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மற்றுமொரு சாதனையை உடைத்தார். அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை (49) முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.

இந்நிலையில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வாய்ப்பிருந்தாலும் அதை விராட் கோலி சாதித்து காட்டுவது மிகவும் கடினம் என்று பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "விராட் கோலி தற்போது 35 வயது நிரம்பியுள்ளார். 80 சதங்கள் அடித்துள்ள அவருக்கு இன்னும் 20 தேவைப்படுகிறது. ஒருவேளை ஒவ்வொரு வருடமும் 5 சதங்கள் அடித்தால் கூட சச்சின் சாதனையை சமன் செய்வதற்கு அவருக்கு இன்னும் 4 வருடங்கள் தேவைப்படும். அதனால் இந்த சாதனையை முறியடிப்பது கொஞ்சம் கடினம்தான். ஏனெனில் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான் வீரருக்கு ஆதரவு

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. கேப்டன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர் என அனைத்து துறைகளிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அவருக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் ஹர்டிக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை குஜராத் அணி வாங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  'குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யாவை இழந்தது மிகப்பெரிய சரிவு . இருப்பினும் அவரது இடத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆல்ரவுண்டரான அஸ்மத்துல்லா ஓமர்சாய் சரியான வீரராக இருப்பார் என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து