முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் மருத்துவமனை, கல்வி நிலையங்களில் ரூ. 5 லட்சம் வரை யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023      இந்தியா      வர்த்தகம்
RBI 2023-04-27

புதுடெல்லி, நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யு.பி.ஐ. கட்டண வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் ‘யு.பி.ஐ.’ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் லாப நோக்கமற்ற நிறுவனமான இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மின்னணு பண பரிவர்த்தனை சேவை கட்டண முறைதான் யு.பி.ஐ.. யு.பி.ஐ. வசதி வந்த பிறகு யாரும் அவசரத்துக்குகூட பணம் வைத்துக் கொள்வதில்லை. காய்கறி கடை, சலூன் கடை, உணவகம் என எல்லாமே யு.பி.ஐ. மயமாக காட்சியளிக்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் நேற்று (டிச.8) நடைபெற்ற டிசம்பர் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதன் முக்கிய அறிவிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட தகவல்., “தற்போது பல்வேறு வகை யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அடிக்கடி மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதன்படி, தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யு.பி.ஐ. பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு அதிக அளவில் பணம் செலுத்த உதவும். மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான இ-ஆணைகள் (e-mandates) வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து