முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வார விடுமுறைக்கு பிறகு 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
School 2023 04 07

Source: provided

சென்னை : ஒரு வார விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றன. 

மழை வெள்ள பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் வடிந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

இதையடுத்து ஒரு வார விடுமுறைக்கு பிறகு இன்று (11-ம் தேதி) பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி கடந்த 2 நாட்கள் 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. 

நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. லாரிகள் மூலமாக இந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பள்ளி வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் அமரும் இருக்கைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. 

சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மின்சாதன பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டு மின்கசிவு ஏதும் ஏற்படுகிறதா? என்பதையும் பள்ளி கல்லூரி ஊழியர்கள் சரிபார்த்துள்ளனர். இது தொடர்பாக தேவையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனது பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து