முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      உலகம்
H-1B-Visa 2025-09-21

நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. 

அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் எச் 1பி விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என ட்ரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்கா தெளிவுபடுத்தியது.

இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. எச் 1பி திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட எச் 1பி விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

இந்நிலையில் ட்ரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முதல் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறை முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

இதுவரை, வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் புதுப்பித்தல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் காலத்தில், 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடரலாம். ஆனால் புதிய விதியின் கீழ், தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் முன் புதுப்பித்தல் பெறாத எவரும் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பத்தை முறையாக தாக்கல் செய்வதன் மூலம் வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க இயலும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதுப்பித்தல் நடவடிக்கைக்கு 3-12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் இந்த முடிவு அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து