முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன..?

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      விளையாட்டு
India 2023-12-10

Source: provided

துபாய் : 2023-2025-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது.2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 1 போட்டி டிரா ஆனது. அதன் பின்னர் இந்திய அணி தற்போது வரை எந்த டெஸ்ட்  தொடரிலும் ஆடவில்லை. 

இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. 

இந்நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதில் பாகிஸ்தான் அணி (100%) முதல் இடத்திலும், இந்தியா (66.67%) 2ம் இடத்திலும், நியூசிலாந்து (50%) 3ம் இடத்திலும், வங்காளதேசம் (50%) 4ம் இடத்திலும், ஆஸ்திரேலியா (30%) 5ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (16.67%) 6ம் இடத்திலும், இங்கிலாந்து (15%) 7ம் இடத்திலும், இலங்கை (0%) 8ம் இடத்திலும் உள்ளன. 

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து