முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன:மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi 2024-03-23

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 125-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த மழைக்காலத்தில் இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளை நாம் பார்த்தோம். வீடுகள் இடிந்து விழுந்தன, வயல்கள் நீரில் மூழ்கின, குடும்பங்களும் அழிந்தன.

இடைவிடாத வெள்ளத்தால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டன, மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன. இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தின. பேரழிவுகள் வேதனையை அளித்தது.

மீட்பு நடவடிக்கையின் போது தேசிய பேரிடர் பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புப் படையினரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மக்களைக் காப்பாற்ற இரவும், பகலும் உழைத்தனர். வீரர்கள் தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றனர் . நேரடி கண்டுபிடிப்பாளர்கள், மோப்ப நாய்கள், டிரோன் கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேரிடர் காலங்களில் ஆயுதப் படைகள் உதவின. உள்ளூர் மக்கள், சமூக சேவையாளர்கள், டாக்டர்கள், நிர்வாகம் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புல்வாமாவில் ஒரு மைதானத்தில் சாதனை எண்ணிக்கையிலான மக்கள் கூடினர். முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி அங்கு நடைபெற்றது. இது முன்பு அங்கு சாத்தியமற்றது. ஆனால் இப்போது நாடு மாறிக்கொண்டு இருக்கிறது என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து