முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபரின் பேச்சு: அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2025      உலகம்
Xi-Jinping 2

Source: provided

பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சீன அதிபரின் பேச்சு அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷ்யா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். 

இந்த ஆண்டுக்கான மாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜின்பிங், “சீனாவும், இந்தியாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட கிழக்கத்திய நாடுகள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள். மேலும் சர்வதேச தெற்கு பிராந்தியத்தின் முக்கிய உறுப்பினர்கள்.

நமது இரு நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல், ஒற்றுமை மற்றும் புத்துணர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மனித சமூகத்தின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் ஆகிய வரலாற்றுப் பொறுப்பை நாங்கள் இருவரும் சுமக்கிறோம்.

நாம் சிறந்த அண்டை நாட்டு நட்புறவுகளைக் கொண்ட நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியை பெற வைக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும். டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது சீன அதிபர் இவ்வாறு பேசியிருப்பது அமெரிக்காவுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து