முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்:ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா விலகல்: பி.சி.சி.ஐ. தகவல்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024      விளையாட்டு
21-Ram-50

Source: provided

 

மும்பை:இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் காயம் காரணமாகவும், ஜஸ்ப்ரிட் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பங்கேற்கவில்லை என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

ராஞ்சியில் போட்டி... 

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை (வருகிற 23-ந்தேதி) தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

பும்ராவிற்கு ஓய்வு...

பணிச்சுமை கருதி பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் விலகிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கேப்டன் யார்? 

இந்திய டெஸ்ட்அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ராஞ்சி டெஸ்ட்டில் துணை கேப்டன் யார் என அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ரோகித்சர்மா களத்தில் இல்லாத நேரத்தில் மூத்த வீரர்களான அஸ்வின் அல்லது ஜடேஜா அணியை வழிநடத்தக்கூடும் என தெரிகிறது.

இந்திய அணி விவரம்:

 

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், கே.எஸ்.பாரத், படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அகாஷ் தீப்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து