Idhayam Matrimony

புயல் பாதித்த 4 மாவட்ட மீனவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
Udayanidhi 2023-02-27

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்ட மீனவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நிகழ்ச்சியில் பேசிய அவர் சக மனிதனுக்கு எந்த பிரதிபலிப்பலனும் பார்க்காமல் உதவுபவனே  இறைவனுக்கு சமமானவன் என தெரிவித்தார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர் தெரிவித்ததாவது..

மிக்ஜாம் புயல், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 12 கோடியே 88 லட்ச ரூபாய்க்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.  எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, யார் ஒருவன் சக மனிதனுக்கு எந்த பிரதிபலிப்பலனும் பார்க்காமல் உதவுகிறானோ அவன் தான் இறைவனுக்கு சமமானவன். இந்தியாவிலேயே ஊட்டச்சத்து நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது அதற்கு காரணம் நம்முடைய மீனவர்கள் தான். ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். அந்த மாணவர்கள் மீது அப்போதைய அரசு வன்முறை மற்றும் வழக்கை பிரயோகித்தது. அப்போது மாணவர்களை காக்க இந்த மீனவர்கள் போராடினார்கள்.

மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது  திமுக ஆட்சியில்தான். மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரண நிதியை  வழங்கவில்லை.  மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் 450 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்கள் அனைவரும் தமிழக அரசின் தூதுவர்களாக செயல்பட்டு தமிழக அரசின் சாதனைகளை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும். “ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 12 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 13 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 14 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 12 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து